Sunday, 27 January 2013

36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் மென்பொருள்



 36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் மென்பொருள்

 

இன்றைய உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்து வருகின்றது.  ஆகவே பலர் பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அதனை தடுக்க முயன்று வருகின்றனர்.   அந்த வகையில் surveillance camera மூலம் 36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் ஒரு சிறந்த மென்பொருளைக் கொண்ட கருவி (system) உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் பாதுகாப்புத்துறையில் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம் உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள camera இடது, வலது பக்கங்களிலும் 30 டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக scan செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வருகின்றது.
செயல்படும் விதம் குறித்த கீழே உள்ள video பாருங்கள்

40 லட்சம் Windows 8 License Download செய்யப்பட்டது

40 லட்சம் Windows 8 License Download செய்யப்பட்டது

 


மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 வெளியான சில நாட்களிலேயே 40 லட்சம் Windows 8 License Download செய்யப்பட்டதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த எண்ணிக்கை தனி நபர்கள் தரவிறக்கம் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான உரிமங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓராண்டுக்குள் 40 கோடி புதிய சாதனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதே போன்று விண்டோஸ் 7, 2009ஆம் ஆண்டில் வெளியான பின்னர் 70 கோடி பதிப்புகள் விற்பனையானது

உங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது

உங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது


உங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்கும். இதற்கான third party programmeகள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள். கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.
தள முகவரி:
http://co2saver.snap.com/snapshots.php#welcome

ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

 

 

Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார்.  இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள் வெளியாகியுள்ளது

Android மொபைளுக்கான Avast antivirus மென்பொருள் வெளியாகியுள்ளது

 

கணினிகளில் பலர் உபயோகப் படுத்தும் இலவச Antivirus மென்பொருள்களில் Avast 'ம் ஒன்று.  அதன் அடிப்படையில் Avast anti virus அடுத்தபடியாக மொபைல் இயங்குதளங்களில் தற்போது முதல் இடத்தில் உள்ள Android மொபைலுக்கான Antivirus மென்பொருளை வெளியிட்டுள்ளது.

இதற்க்கான Download link 



கணினி Auto power on & Shut down மிக தேவையான ஒரு மென்பொருள்.

கணினி Auto power on & Shut down மிக தேவையான ஒரு மென்பொருள்.

 

அனைவருக்கும் மிக தேவையான மென்பொருள்னா அது இதுதான்னு சொல்லனும்,இந்த Auto power on & Shut down மென்பொருள் உபயோகிச்சு நமக்கு தேவையானப்ப கணினியை ஆன்செய்துகொள்ளமுடியும். தெவையில்லாதப்ப ஆவ் (Off) செய்து கொள்ளவும் முடியும். அதாவது இப்ப உங்க Downloading time நைட் 2-8 am னு இருந்தா, 2 மணிக்கு கம்யூட்டர் ஆன் பண்ணி, 8 மணிக்கு கம்யூட்டர் ஆவ் செய்து கொள்ளமுடியும். நீங்க Torrent யூஸ் பண்ணி ஏதாவது ஒரு பைல்ல Download செய்து கொள்ள முடியும். உங்க கணினியை Hibernate mode-ல் வைத்து விட்டு, இந்த மென்பொருளை கொண்டு மிச்ச வேலையை செய்யலாம்.
இல்லனா, அலாரம் போல கூட உங்க கணினிய இந்த பொருள் கொண்டு நீங்க உபயோகப்படுத்தலாம். உதாரணமா, ஒரு பாடல காலையில Play ஆகற மாதிரி செட் பண்ணிக்க முடியும். டிவி இருந்தா அத ரெக்கார்ட் பண்ணிக்க முடியும். இன்னும் நிறைய உபயோகமான விஷயங்களுக்கு இந்த மென்பொருள் உபயோகப்படுது. சுமார் 5 Mb அளவுதான் இந்த பைலோட சைஸ், Install பண்றதும் ரொம்ப ஈஸி, இந்த மென்பொருள் ரொம்ப சின்னது. ஆனா ரொம்ப உபயோகமானது.