Saturday, 20 July 2013

pendriveக்கு password எப்படி உருவாக்குவது

நம்மிடத்தில்  உள்ள சில முக்கியமான dataகளையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் அனைவரும் அதிகம் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
நம்முடைய PenDrive தகவல்களை மற்றவர்கள்  பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு password கொடுத்து இதை தடுக்க முடியும்.
அதற்க்கு நீங்கள் Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி install செய்ய வேண்டும்.
மென்பொருளை பதிவிறக்க செய்ய : Rohos Mini
இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.
படம்-1


அதில் Setup USB key என்பதனை click செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.

படம்-3
பிறகு ok  செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
click செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.
படம்-4
Performing operation என்ற செய்தி screenல் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.
படம்-5
பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.
படம்-6
பின் Rohos Icon யை click செய்து, வரும் windowல்
Conect disk என்பதனை click செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.
படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்
Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.
படம் 8 யை பார்க்கவும்.
படம்-8
Pendrive யை விட்டு வெளியே வரும் போது.
Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்
Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.
படம்-9
அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
படம் 10 யை பார்க்கவும்.
படம்-10
இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்.

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே.
Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk  போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும்.
இந்த பதிவில் Firefox Portable Browser – ஐ பயன்படுத்தி உள்ளேன்.
டவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive – இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது.
அடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இதில் நீங்கள் இயங்குவது History – இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive – இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன மென்பொருட்களை பயன்படுத்தலாம் ? 
இதில் எல்லா மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாத வசதி இருப்பினும் Chrome, Firefox, 7-Zip, Google Talk, FileZilla, Free Download Manager, GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Sumatra PDF, TeamViewer, VLC, VirtualDub, WinRAR மற்றும் பல பயனுள்ள மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
பெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.

Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps

என்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software - See more at: http://www.karpom.com/2013/02/portable-application.html#sthash.x6RBSc4B.dpuf

விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்



                         தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி டாப்லெட், ஸ்மார்ட்போன் என்று ஆன இச்சமயத்தில் கனமான போட்டிகளுக்கு இடையில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் மைக்ரோசாஃப்ட் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.விண்டோஸ் 8 ஐ ”டாப்லெட்டிலும் ஓடுவேன், டெஸ்க்டாப்பிலும் ஆடுவேன்”என்று சகலகலாவல்லவன் கமல் பாணியில் (அப்பாடா, ரெண்டு பேர் ரசிகர்களையும் கவர்ந்தாயிற்று) எல்லாவற்றிலும் நிறுவக் கூடிய ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் வசதிகள் என்ன, புது செருப்பு காலை கடிப்பது மாதிரி  கடிப்பவை என்னென்ன என்று பார்ப்பது இந்த மெகா தொடரின்,மன்னிக்கவும்,  இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நம் நண்பர் பிரபு கிருஷ்ணா ஏற்கனவே டெல் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கும் மின் புத்தகத்தின் இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறார். இருப்பினும் அழகுத் தமிழில் டெக்னாலஜி படித்தால் மிக இனிமையாகத் தான் இருக்கிறது. எனவே….
மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

  1. விண்டோஸ் 8 இல் ஸ்டார்ட் பட்டன் இருக்காது. என்னைக் காணவில்லையே எயிட்டோடு என்று பாடிவிட்டு ஒளித்து வைத்து விட்டனர். இது திகைப்பிலாழ்த்தினாலும் நாம் தான் ஒளிந்திருப்பதை கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாயிற்றே. அதை பிறிதொரு முறை தேடுவோம்.
மாறாக, அதன் ஸ்டார்ட் திரைக்கு அவ்வவ்போது வந்து போக வேண்டியிருக்கும். உ.ம், ஒரு புதிய யூஸர் அக்கவுண்ட்டைப் புதிதாகத் தொடக்கும் போது,  புகைப்படம், ஒரு பாட்டு இவற்றை இயக்க, பார்க்க இருக்கையில். இவற்றை டெஸ்க்டாப்பில் பார்க்க ஆரம்பித்தாலும் மறுபடி ஸ்டார்ட் திரைக்குக் கொண்டு வந்து விடும்.

  1. ஆப்பிள் ஐ-போடை விண்டோஸ் 8 கணினியில் இணைத்தால் ”தம்பி யாருன்னே தெரியலையே” என்பது போல கண்டு கொள்ளாது.சமூகத்தின் உயரிய மட்டத்தில் வாழ்பவர்கள் என்பதன் அடையாளமான (ஸ்ஸ்ஸ், சோஷியல் ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதன் நீட்டி முழக்கம் அது) ஐ-போடை உபயோகிப்பவர்கள் ஒன்று ஆப்பிள் ஐ-டியூனை நிறுவிக் கொள்ள வேண்டும், அல்லது விண்டோஸ்(வேண்டுமென்றே) ஒரு பென் - டிரைவைப் போல பாவிக்கும் எக்ஸ்ப்ளோரரில் அதன் கோப்புகளை காப்பி செய்து கொள்ளலாம்.ஐ டியூன்ஸ் கொஞ்சம் எளிதான வழி இதற்கு.
  1. அடிக்கடி வொர்க்-ஸ்டேஷன் லாக் அவுட் ஆவது. இது ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும் போய் ஒரு காப்பியை கலந்து வைத்துக் கொண்டு வந்தால் படக்கென்று லாக் ஸ்க்ரீனைக் காண்பித்து மறுபடி கடவுச் சொல்லைக் கேட்கும். இதை கண்ட்ரோல் பேனலில் உள்ள கடவுச் சொல்லை அடிக்கடி கேட்டுத் தொல்லை பண்ணவும் என்பதை க்ளியர் பண்ணவும். எப்படி என்றால்…
- Right-click in any screen’s bottom-left corner and then choose Control Panel.
- From the Control Panel, click System and Security and then click Power Options.
- From the screen’s left edge, click Require a Password on Wakeup.
- When the window appears, most of the options are grayed out — inaccessible.
- Select the option labeled Change Settings That Are Currently Unavailable.
- Select the Don’t Require a Password option and then click the Save Changes button.

  1. எத்தனை கோடி விண்டோஸைத் திறந்தேன் இறைவா என்று வகைக்கொன்றாக பல விண்டோக்களைத் திறந்து வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைபாய்பவரா நீங்கள்? என்னென்ன விண்டோஸ் திறந்து ஆக்டிவாக இருக்கிறது என்பதை அறிய Altஎன்ற கீயையும் Tab ஐயும் அழுத்தவும். ஒரு சிறிய விண்டோவில் நீங்கள் திறந்திருக்கும் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டும். Tab ஐ அழுத்தி, விடுவித்துக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விண்டோ ஆக்டிவ் ஆக காட்டும் போது Tab ஐ விட்டு விட்டால் அந்த விண்டோ ஸ்க்ரீன் முன் வந்து விடும். இது விண்டோஸின் பழைய டெக்னிக் தான். விண்டோஸ் படம் போட்ட கீயையும் Tab ஐயும் அழுத்தினாலும் இதைப் போன்றே வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
  1. 8 இல் அட்மின் பயனாளராக இருப்பவருக்கே அனைத்து சலுகைகளும் உண்டு, இணையத்தில் உலாவ, புதிய மென்பொருளை நிறுவ இன்னபிற. சாதாரண பயனாளர் ஏற்கனவே இருப்பனவற்றை பயன்படுத்தலாம். இணையத்தில் உலாவ வேண்டுமானால் உங்கள் கணினி ”எப்போதும் கனெக்ட்” ஆகி இருக்கும் இணைப்பை வேண்டுமானால் இவர்கள் பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் தங்கள் ப்ரொஃபைல் படத்தை சூரியகாந்தி பூவிலிருந்து சாமுராய் ஆக்கிக் கொள்ளலாம், கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.
கொசுறு: யுனிக்ஸ், மேக் ஆர்வலர்கள் ”உலகத்திலேயே ஸ்டார்ட் ன்னு பட்டன் வைச்சு அதை க்ளிக் பண்ணிய உடனே ஷட் டவுன் என்ற பட்டனை வைப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரால் தான் முடியும்” என்று கேலி செய்ததாலோ என்னவோ ஷட் டவுனை விஸ்டாவிலிருந்து ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
இது ஒரு தொடக்கமே. விண்டோஸ் 8 இல் நிறைய இருக்கிறது தெரிந்து கொள்ள.எனவே தொடர்ந்து எதிர்பாருங்கள்.
வாய்ப்பளித்தமைக்கு பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி.

Scorce : http://www.karpom.com/2013/01/five-intuitive-things-about-windows-8.html#sthash.VICkJtJQ.dpuf

VLC Player – இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts

VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player – இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள்.

அதிகமாக பயன்படுத்தப்படுவது
F வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Space வீடியோவை Pause அல்லது Play செய்ய
V Subtitle மாற்ற அல்லது மறைக்க
B ஆடியோ track மாற்ற
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Down வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க

மௌஸ் மூலம்
Double Click வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Scroll வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
Right Click Play Control மெனு

Movie Navigation
Ctrl+D DVD Drive – ஐ தெரிவு செய்ய
Ctrl+F குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய
Ctrl+R/Ctrl+S குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க
Ctrl+O ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய
M வால்யூம் Mute அல்லது Unmute செய்ய
P ஆரம்பத்தில் இருந்து Play செய்ய
S Play ஆவதை நிறுத்த
Esc முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற
[+]/-/= வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க
A Aspect Ratio மாற்ற
C Screen – ஐ Crop செய்ய
G/H Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய
J/K Audio Delay இருந்தால் அதை சரி செய்ய
Z Zoom – ஐ மாற்ற
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய
T வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட

வீடியோவை Forward/Backward செய்ய
Shift+Left/Right 3 நொடிகள் முன்/பின் செல்ல
Alt+Left/Right 10 நொடிகள் முன்/பின் செல்ல
Ctrl+Left/Right 1 நிமிடம் முன்/பின் செல்ல

Advacned Controls
Ctrl+H Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க
Ctrl+P Preferences/ Interface Settings – ஐ மாற்ற
Ctrl+E Audio/Video Effects – ஐ மாற்ற
Ctrl+B குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க
Ctrl+M  Messages –ஐ ஓபன் செய்ய
Ctrl+N Network Stream –ஐ ஓபன் செய்ய
Ctrl+C Capture Device – ஐ ஓபன் செய்ய
Ctrl+L Playlist – ஐ ஓபன் செய்ய
Ctrl+Y Playlist – ஐ Save செய்ய
Ctrl+I/Ctrl+J Play ஆகும் File – இன் தகவல்களை அறிய
Alt+A Audio Menu – ஐ ஓபன் செய்ய
Alt+H Help Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+M Media Menu – ஐ ஓபன் செய்ய
Alt+P  Playlist Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+T  Tool Menu – ஐ ஓபன் செய்ய
Alt+V Video Menu – ஐ ஓபன் செய்ய
Alt+L Playback Menu – ஐ ஓபன் செய்ய
D Deinterlace – ஐ ON/OFF செய்ய
N Playlist – அடுத்த File – ஐ Play செய்ய
F1 Help ஓபன் செய்ய
F11 Control Menu – வுடன் கூடிய Full Screen
Shift+F1 VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய
Alt+F4, Alt+Q Orctrl+Q VLC – ஐ விட்டு வெளியேற

MS 2010 – இல் Power Point Presentation – ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?



MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation – களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம்.
MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter.
இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம்.
1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள்.
 
 
 
2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள்.
 
 
 
3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும்.
4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு “Create Video” என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும்.

பாதுகாப்பாக மொபைல் பேங்கிங்

Mobile Banking 12 Safety Tips Safe Banking


இன்றைய காலகட்டத்தில் மொபைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்தும் மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.




பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:

1. உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும்.
2. செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும்.
3. செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
4. செல்போன் அதிலும் குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்ககூடிய ஆபத்து அதிகம்.
5. உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.
6. இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். (உதராணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை).
7. டெபிட்/கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம்.
8. உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள்.
9. மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மற்றுங்கள்.
10. வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம்.
11. மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை ஃபை இணைப்பை(Wi-Fi) பயன்படுத்த வேண்டாம்.
12. ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள்.
எனினும், மேல்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.


Source From : http://tamil.goodreturns.in/

Sunday, 27 January 2013

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

 

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன.  இலவச மென்பொருட்களை தரவிறக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன.  ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அவ்வாறு உள்ள 10 தளங்கள் பற்றி காண்போம்.



தளங்கள்                       தளங்கள் Open செய்ய பயன்படும் லிங்குகள்
1. CNET  -  RANK 159 http://download.cnet.com
2. BROTHER SOFT –  RANK 300 http://www.brothersoft.com/
3. SOFTPEDIA –  RANK 348 http://www.softpedia.com/
4. FILE HIPPO –  RANK 688 http://www.filehippo.com/
5. ZDNET – RANK 1224 http://downloads.zdnet.com/
6. FREE DOWNLOAD CENTER- RANK 1256 http://www.freedownloadscenter.com/
7. DL 4 ALL-   RANK 1404 http://www.dl4all.com.
8. DOWNLOAD ATOZ- RANK 2508 http://www.downloadatoz.com/
9. SOFT32- RANK 3909 http://www.soft32.com/
10. DOWNLOAD 3000 - RANK 4201 http://www.download3000.com/